சிக்ஸ் பேக்குடன் போஸ் கொடுத்த ஆரவ் - சூப்பரான போட்டோ வைரல்

viral-photo actor-arav six-bag சிக்ஸ் பேக் ஆரவ் போட்டோ வைரல்
By Nandhini Mar 04, 2022 11:52 AM GMT
Report

கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 மூலம் மிகவும் பிரபலமானவர்தான் ஆரவ். அந்த சீசனில் நடிகை ஓவியாவால் காதலிக்கப்பட்டு இன்னும் பிரபலமானார். 

பிறகு, பிக்பாஸ் முதல் சீசனில் இவர் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டித் தூக்கினார். 

இதனையடுத்து, படவாய்ப்புகள் ஆரவ்விற்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ என்ற படத்தில் இவர் ஹீரோவாக நடித்துள்ளார். 

கடந்த 2019ம் ஆண்டு ஆரவ், ராஹே என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில், ஆரவ் சிக்ஸ் பேக்குடன் வெறித்தனமான புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் மாஸாக, ஸ்டைலாக தன்னுடைய உடல் அழகை வெளிப்படுத்தியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம் -