வித்தியாசமான முறையில் தந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மகள் - அப்படியே... நெகிழ்ந்து போன அல்லு அர்ஜூன் - வைரலாகும் படம்
வித்தியாசமான கதாபாத்திரத்தால் அல்லு அர்ஜூனுக்கு தனி மார்க்கெட் உருவாகி இருக்கிறது. இதனையடுத்து, ‘புஷ்பா’ படத்தின் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள், எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, இப்படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இதற்கான பணிகளில் இயக்குநர் சுகுமார் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், துபாய் சென்றுவிட்டு 16 நாட்களுக்குப் பின்னர் அல்லு அர்ஜூன் வீடு திரும்பினார்.
அவருக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில், அவரது மகள் ஆர்கா, வீட்டுத் தரையில் இலைகள் மற்றும் பூக்களால் ‘வெல்கம் நானா’ என்று எழுதப்பட்ட வாசகத்துடன் வரவேற்றிருக்கிறார்.
இதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த நடிகர் அல்லு அர்ஜூன், இதனை புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘16 நாட்கள் கழித்து இனிமையான வரவேற்பு’ என்று பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.