தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பிரபல நடிகர்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ள பிரபல சீரியல் நடிகரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
சின்னத்திரையில் தொகுப்பாளர், சீரியல் நடிகர் என ஒரே நேரத்தில் இரட்டை பாதையில் பயணம் செய்வது என்பது ஒரு சில பேருக்கே சிறப்பாக அமையும். அந்த வகையில் கலைஞர் டி.வியில் ‘பட்டாசு பாய்ஸ், மத்தாப்பு கேர்ள்ஸ்’, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘கலாட்டா பொங்கல்’ ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அழகப்பன், சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அந்நிகழ்ச்சியில் தெருக்கூத்து கலைஞராக அவர் செய்த பெர்பாமன்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதேசமயம் கானா காணும் காலங்கள்’சீரியலில் காலேஜ் பேட்ஜில் காமெடி நடிகராக நடித்த அழகப்பன் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ரோமியோ ஜூலியட் என்ற நிகழ்ச்சியிலும் மனைவியுடன் பங்கேற்று அசத்தினார்.
பின்னர் அதே ஜீ தமிழில் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’, ‘செம்பருத்தி’ ஆகிய சீரியல்களில் சிறு வேடங்களில் நடித்தார். இந்நிலையில் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘அம்மன் 3’, ‘உடன்பிறப்பே’ ஆகிய சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் அழகப்பன் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்மன் கோயிலில் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலையில் பால்குடத்துடன் அவர் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. எல்லா வளமும் நலமும் பெற்று நாம் அனைவரும் சிறப்புற வாழ்வோம் என அழகப்பன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.