பிரதமர் மோடியுடன் கைக்கோர்த்த நடிகர் அஜித் - அதிரவைக்கும் போஸ்டர்
நடிகர் அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது.
போனிகபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படம் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு, தியேட்டர்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி போன்ற காரணங்களால் படத்தில் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன் வலிமை படம் பிப்ரவரி 24 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்நிலையில் வழக்கம்போல இரண்டாண்டுகளுக்குப் பின் அஜித் படம் வெளியாகவுள்ளதால் தியேட்டர்களில் கொண்டாட்டம் களைக்கட்டியுள்ளது. அந்த வகையில் பிரம்மாண்ட கட் அவுட்டுகள், நூற்றுக்கணக்கான அடி நீள பிளக்ஸ் பேனர்கள், என தியேட்டர் வாசல்களில் திருவிழா கோலம் காண ஊரெங்கும் போஸ்டர்களும் வேற லெவலில் உள்ளது.
அதில் ஒரு போஸ்டர் மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோருடன் அஜித் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள போஸ்டர் தற்போது பேசு பொருளாக உள்ளது.