நடிகர் அஜித்தின் தந்தை காலமானார் : சோகத்தில் ரசிகர்கள்
நடிகர் அஜித்தின் தந்தை உடல் நலக்குறைவினால் காலமானார்.
அஜித் தந்தை மரணம்
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார் , இந்த நிலையில் நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் (86) உடல்நலக்குறைவினால் சென்னையில் உள்ள வீட்டில் காலமாமானார்.
அவரது இறுதி சடங்கு பெசன்நகர் மைதானத்தில் 9:30 மணிக்கு பெசண்ட் நகர் மைதானத்தில் இறுதி சடங்கு நடைபெறும் என்று கூறப்படுகின்றது, கடந்த சில நாட்களாகவே அஜித்குமாரின் தந்தை உடல் நலக்குறைவினால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகின்றது.
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த மூன்று ஆண்டுகளாக உடல் நலக்குறைவாழ் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை 3:15 மணி அளவில் காலமானார், அவரது மரணம் அஜித் குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியினையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது