கடுக்கன், தாடியுடன் மாஸாக போஸ் கொடுத்த அஜீத் - வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் - தெறிக்க விட்ட ரசிகர்கள்

son daughter viral-photos actor-ajith வைரல் புகைப்படம் wife-shalini அஜீத் ஷாலினி அனௌஷ்கா ஆத்விக் குமார்
By Nandhini Mar 03, 2022 04:39 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது ரசிகர்கள் இவரை ‘தல’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.

நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அஜீத்திற்கு மகள் அனௌஷ்காவும், மகன் ஆத்விக் குமார் உள்ளனர்.

இந்நிலையில், அஜீத் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜீத்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் 3வது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

இப்படம் வரும் மார்ச் 9-ஆம் தேதி முதல் ஐதராபாத்தில் படப்பிடிப்புத் துவங்க இருக்கிறது. வரும் தீபாவளிக்கு ‘அஜித் 61’ படம் திரையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்திற்கு நாயகியாக தபுவும், ‘பிக்பாஸ்’ கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களாம். இப்படத்திற்காக நடிகர் அஜித் 25 கிலோ உடல் எடையை குறைக்க திட்டமிட்டுள்ளாராம்.

தற்போது, அவர் 10 கிலோ எடையை குறைத்துள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், தற்போது கடுக்கன், தாடியுடன் அஜித் இருப்பது போன்ற, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அஜீத்துடன் மனைவி ஷாலினி, மகன், மகள் உள்ளனர்.