பொருட்கள் வாங்க சூப்பர் மார்க்கெட் சென்ற நடிகர் அஜித் - வைரலாகும் வீடியோ..!

Ajith Kumar Tamil Cinema London
1 மாதம் முன்

லண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடையில் நடிகர் அஜித்குமார் பொருட்கள் வாங்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சுற்றுப்பயணம் செய்து வரும் அஜித்

நடிகர் அஜித்குமார், ஹெச்.வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்க இருக்கிறது.

பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட அஜித்குமார், கிடைக்கும் நேரத்தில் பைக்கில் நீண்ட தூரம் சுற்றுவது வழக்கம்.

வலிமை படப்பிடிப்பு முடிந்ததும் நண்பர்களுடன் இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுலா சென்று வந்தார் அஜித். தற்போது ஐரோப்பிய நாடுகளில், பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் அஜித்.

விலை உயர்ந்த பைக்குடன் அஜித் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அண்மையில் வைரலானது.

லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் அஜித் 

இதையடுத்து, அங்கிருந்து பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றார் அஜித். அங்குள்ள அட்டோமியம் என்ற சுற்றுலா தளம் முன் அஜித் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியானது.

இந்நிலையில், லண்டன் சூப்பர் மார்க்கெட் கடையில் நடிகர் அஜித் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Ajithkumar

அஜித்தை பார்த்ததும் அடையாளம் தெரிந்து கொண்ட கடையின் கேஷியர், அவரிடம் கை குலுக்குகிறார். பின்னர் அங்கிருந்து அஜித் செல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

விபத்தில் சிக்கிய நடிகர் விஷால் - துடிதுடித்து விழுந்த பரிதாபம்..!

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.