Wednesday, May 7, 2025

ஹோட்டல் அறையில் முதுகில் அடி வாங்கிய நடிகர் அஜித் - 14 ஆண்டுகளாக தீராத பகை..!

Ajith Kumar Tamil Cinema Bala
By Thahir 2 years ago
Report

நீ என்ன பெரிய ஆளா என கூறி நபர் ஒருவர் நடிகர் அஜித்தை முதுகில் அடித்ததாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

14 வருடம் தீராத பகை 

கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் நடிகர் அஜித் நடிக்க இருந்த நிலையில், சில காரணங்களால் அன்புச்செழியன், பாலா, அஜித் இடையே மோதல் ஏற்பட்டதால் 14 வருடங்கள் ஆன போதும் நடிகர் அஜித் இவர்களுடன் பேசி கொள்வதில்லை.

Actor Ajith was slapped on the back in hotel room

இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பேசும் போது. அஜித், பாலா, மற்றும் அவருடைய படக்குழுவினர் எல்லாம் சேர்ந்து ஹோட்டலில் அறை எடுத்து படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அறையில் வைத்து அஜித் மீது அடித்த நபர் 

அப்போது பாலா மற்றும் அஜித் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் படத்தில் என்னால் நடிக்க முடியாது என நடிகர் அஜித் கூறிவிட்டு அறையை விட்டு கிளம்பும் போது பின்னால் இருந்த நபர் அஜித்தின் முதுகில் அடித்து நீ என்ன பெரிய ஆளா என கூறினாராம்.

அங்கு இருந்து வெளியேறிய நடிகர் அஜித் 20 நாட்கள் மேலாகியும் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார் என்று பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.