திமுக-வுக்கு ஆதரவாக நடிகர் அஜித், விஜய்? வெளியான அதிகாரப்பூர்வ விளக்கம்
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரே கட்டமாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 7 மணிமுதலே சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்குபதிவு தொடங்கும் முன்னர் நடிகர் அஜித், தன்னுடைய மனைவி ஷாலினியுடன் வந்து காத்திருந்தார், அப்போது ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்ற போது கூட, அவர்களை எச்சரித்தார். தொடர்ந்து நடிகர் விஜய்யும் அவரது வீட்டிலிருந்து சைக்கிளில் பயணம் செய்து வாக்குசாவடிக்கு வந்து வாக்களித்தார்.

இவரை பார்த்ததும் ரசிகர்கள் ஆர்ப்பரித்த வீடியோ காட்சிகள் வெளியாகின, இந்நிலையில் இவர்கள் இருவரும் திமுக-வுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார் என திமுக தொண்டர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதற்கு காரணம், நடிகர் அஜித் அணிந்திருந்த மாஸ்க் திமுக கட்சி கொடியின் வண்ணத்தில் இருந்ததும், நடிகர் விஜய் பெட்ரோல் விலையை கண்டித்து தான் சைக்கிளில் பயணம் செய்தார் எனவும் கூறிவருகின்றனர்.
இதுமட்டுமா நடிகர் விஜய் ஓட்டி வந்த சைக்கிளில் திமுக கட்சி கொடியின் வண்ணத்தில் இருந்தது, இருவரும் காலையே வாக்களித்து தங்களுடைய ஆதரவை வெளிப்படையாக தொண்டர்களுக்கு காட்டிக் கொடுத்து விட்டதாகவும் திமுகவினர் தொடர்ந்து கமெண்டுகள் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தே விஜய், சைக்கிளில் வந்திருக்கலாம் என உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், வாக்குசாவடி அருகில் இருந்த காரணத்தினால் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்ததாக அவரது தரப்பிலிருந்து விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
