அப்செட்டில் இருக்கும் அஜித்…படக்குழுவினருக்கு போட்ட அதிரடி ஆர்டர் - வெளியான தகவல்…!
‘துணிவு’ படம்
நடிகர் அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘துணிவு’. இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். எச்.வினோத் இயக்கியுள்ளார்.
இப்படம் கடந்த 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அப்போது, சென்னை ரோகினி தியேட்டரில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய 2 படங்கள் திரையிடப்பட்டன.
ரசிகர் உயிரிழப்பு
தியேட்டர் வாசலில் ஏராளமான விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் குவிந்தனர். அந்த சமயத்தில் சென்னை சிந்தாதிரிப்பேட்டயைச் சேர்ந்த பரத்குமார் (19) என்பவர் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது ஏறி நடனமாடிய போது கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
படக்குழுவினருக்கு போட்ட அதிரடி ஆர்டர்
ஆனால், ரசிகர் உயிரிழந்ததற்கு அஜித் தரப்பிலிருந்து எந்தவொரு இரங்கல் செய்தி வெளிவரவில்லை.
இது குறித்து ‘துணிவு’ பட ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் பேசுகையில், ரசிகர் உயிரிழந்த செய்தி கேட்டதிலிருந்து அஜித் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்.
படக்குழு ‘துணிவு’ பட வெற்றி விழாவை கொண்டாட திட்டமிட்டனர். ஆனால், வெற்றி விழாவை கொண்டாட வேண்டாம் என்று நடிகர் அஜித் படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்து விக்னேஷ் சிவனுடன் இணையும் ஏகே-62 படத்தின் பூஜையையும் மிகவும் எளிமையாக நடத்த அஜித் கூறியிருக்கிறாராம். சொல்லப்போனால் மீடியா வெளிச்சமே படக்கூடாது என்றும் உறுதியாக கூறியிருக்கிறார் என்றார்.