தனது ரசிகர்களுக்கு அஜித் சொன்ன குட்டி ஸ்டோரி - வைரலாகும் பதிவு!

Ajith Kumar
By Swetha Subash May 31, 2022 09:15 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சினிமா
Report

தனது ரசிகர்களுக்கு அஜித்குமார் சார்பில் அவரது மேலாளர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தனது ரசிகர்களுக்கு அஜித் சொன்ன குட்டி ஸ்டோரி - வைரலாகும் பதிவு! | Actor Ajith Manager Suresh Chandra Shares A Story

இந்நிலையில், தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பங்கேற்று பேசுவது, இசைவெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என அனைத்தையும் முற்றிலுமாக தவிர்த்து வரும் நடிகர் அஜித், தனது அறிக்கை மற்றும் கருத்துகளை மேலாளர் சுரேஷ் சந்திரா வாயிலாக வெளியிட்டு ரசிகரகளுடன் தொடர்பு வைத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது நடிகர் அஜித்தின் பெயரில் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் கழுதையுடன் ஒரு வயதான தம்பதி செல்வதும், அப்போது அவர்கள் செய்யும் ஒவ்வொன்றிற்கும் இந்த சமூகம் முன்வைக்கும் விமர்சனங்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

நாம் எதை செய்தாலும், அதை விமர்சிப்பவர்கள் இங்கு இருந்துகொண்டே தான் இருப்பார்கள். அதனால் அவர்களைப் பற்றி கவலைப்படாமல் நம் விருப்பத்துக்கு ஏற்ப வாழவேண்டும் என்ற நீதியை உணர்த்தும் வகையில் அந்த கார்ட்டூன் புகைப்படம் அமைந்துள்ளது.

இந்த புகைப்படத்துடன், 'இந்த குட்டி கதை, யாருக்கு தேவைப்படுகிறதோ, அவர்களுக்காக.. அன்புடன் அஜித்' என பதிவிட்டுள்ளார் சுரேஷ் சந்திரா. இதை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து டிரெண்டாக்கி வருகின்றனர்.