வெளியானது நடிகர் அஜித்தின் அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட்
தமிழ் திரையுலகில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். அவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பிரபல ஹிந்தி திரையுலக தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் ஹிந்தி நடிகை ஹீமா குரேஷி, வில்லனாக கார்த்திகேயா ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கொரோனா 3-ம் அலை காரணமாக பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் வருகிற 24-ந் தேதி வலிமை திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
படத்தை காண ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் அஜித்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
நேர்கொண்ட பார்வை, இப்பொழுது வலிமை படத்தில் ஒன்றாக பணியாற்றியுள்ள எச்.வினோத்-அஜித் குமார்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக இணையுள்ள தகவல் ஏற்கனவே அனைவரும் அறிந்த ஒரு செய்தியே.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்திற்கு பிறகு அஜித்தின் 61-வது படமான இப்படத்தில் நடிகை தபு மீண்டும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 9-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இதற்காக ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சென்னை அண்ணா சாலையில் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வை குறித்து இப்படத்தின் கதை இருப்பதால் அண்ணா சாலையை போன்றே அங்கு செட் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.