நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்

Ajith Kumar
By Yashini May 30, 2026 08:00 AM GMT
Report

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம்வருபவர் அஜித்குமார்.

இவரின் தாயார் மோகினி மணி(84) சென்னை பாலவாக்கத்தில் வசித்துவந்தார்.

இந்நிலையில், இவர் வயதுமூப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.

அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் கடந்த 2023ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார்.

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார் | Actor Ajith Kumar Mother Passed Away

தந்தை இறந்த இரண்டு வருடங்களில் தாய் உயிரிழந்த செய்தி அஜித்குமார் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தாயாரின் மறைவு செய்தியை கேட்டு துபாயில் இருந்த அஜித் உடனடியாக சென்னை வந்தார்.

இதனைத்தொடர்ந்து, அவரின் இறுதிச் சடங்கு நாளை சென்னையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளன.

அஜித்குமாரின் தாயார் மோகினி மணி அவர்களின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.