துபாயில் சிக்கிக்கொண்ட நடிகர் அஜித்: ரசிகர்கள் கவலை

Ajith Kumar
By Fathima Mar 01, 2026 03:58 PM GMT
Report

நடிகர் அஜித்குமார் கார் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார், வெளிநாடுகளில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடினார்.

துபாயில் தங்கி கார் பந்தயத்தில் கலந்து கொண்டிருக்கும் அஜித்தை திரை பிரபலங்கள் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இந்நிலையில் ஈரானை குறிவைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வர ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்

ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்


ஐக்கிய அமீரகத்தின் அபுதாபி உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடந்து வருகிறது, துபாயின் முக்கிய கட்டிடங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துபாயில் தங்கியுள்ள அஜித்குமார் குறித்து அவரது ரசிகர்கள் கவலை தெரிவித்தனர்.

அஜித்குமார் பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளதாகவும், இயல்புநிலை திரும்பியவுடன் சென்னை திரும்புவார் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

துபாயில் சிக்கிக்கொண்ட நடிகர் அஜித்: ரசிகர்கள் கவலை | Actor Ajith In Dubai