‘’ கூட இருக்கவன நட்பா நல்லா வெச்சுக்கோ ‘’ : மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் அஜித் கடிதம்

Ajithkumar AK
By Irumporai Apr 01, 2022 04:09 AM GMT
Report

தனக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் அஜித் எழுதியுள்ள கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்திற்காக நடிகர் அஜித் 25 கிலோ எடை குறைக்க திட்டமிட்டு தற்போது 10 கிலோ வரை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2 வது வாரத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தை விரைந்து முடித்து தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு அதிகாலையில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணைய்த்தில் வைரலான நிலையில் தற்போது கேரளாவில் தனக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் அஜித் கடிதம் எழுதியுள்ளார் அந்த கடிதம் தற்போது இணையத்தில் வரலாகிவருகிறது.