முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ.25 லட்சம் வழங்கினார்

Ajith Stalin CM Fund Donation
By mohanelango May 14, 2021 05:10 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த புதிய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது மே 24 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு மக்கள் நன்கொடை அளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அஜித் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடை செலுத்தியுள்ளார்.