நயன்தாரா வேண்டவே வேண்டாம் - விக்னேஷ் சிவனை வச்சு செய்த நடிகர் அஜித்

Ajith Kumar Nayanthara Tamil Cinema Vignesh Shivan
By Thahir Feb 16, 2023 03:54 AM GMT
Report

நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு முன்பு அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.

விக்னேஷ் சிவன் நீக்கம் 

இதையடுத்து இரட்டை குழந்தைகள் விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் இருவரும் திருமணத்திற்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இது போன்ற சர்ச்சைகள் எல்லாம் சற்று ஓய்ந்த நிலையில், விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து AK62 திரைப்படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் பணிகளிலும் விக்னேஷ் சிவன் ஈடுபட்டு வந்தார். அதன்படி வில்லனாக அரவிந்த் சாமி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

அதோடு நகைச்சுவை நடிகர் சந்தானமும் இப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் பணிகளிலும் விக்னேஷ் சிவன் ஈடுபட்டு வந்தார். அதன்படி வில்லனாக அரவிந்த் சாமி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

நயன்தாரா வேண்டவே வேண்டாம் - விக்னேஷ் சிவனை வச்சு செய்த நடிகர் அஜித் | Actor Ajith Does Not Want Nayanthara

அதோடு நகைச்சுவை நடிகர் சந்தானமும் இப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இப்படி படு ஜோராக நடைபெற்று வந்த ஏகே 62 பணிகள் கடந்த மாத இறுதியில் நிறுத்தப்பட்டு அப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் அதிரடியாக நீக்கப்பட்டார்.

நயன்தாரா தான் காரணம்?

விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ் திருமேனி தற்போது ஒப்பந்தம் ஆகி உள்ளார். இதற்கு காரணமாக அவரை படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு தகவலும் பரவி வருகிறது.

ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதற்கு அவரது மனைவியும் நடிகையுமான நயன்தாரா தான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அப்படத்தில் அஜித்துடன் நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டும் என்று விக்னேஷ் சிவன் முடிவு செய்திருந்தார். இந்த நிலையில் இது குறித்து அஜித்திடம் விக்னேஷ் சிவன் தனது மனைவியை சிபாரிசு செய்துள்ளார்.

இதை ஒப்புக்கொள்ளாத அஜித் வேண்டவே வேண்டாம் என்று கூறியதோடு கத்ரினா கைஃப், த்ரிஷா பெயர்களை கூறியிருக்கிறார்.

லைக்கா நிறுவனமும் கத்ரினா கைஃப் -ஐ அணுகியதோடு 15 கோடி சம்பளமும் பேசி உள்ளனர். அதை ஒரு பொருட்டாக கருதாமல் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் பெயரை கூறி அஜித்தை டார்ச்சர் செய்து வந்துள்ளாராம். அதனால் கடுப்பாகிய அஜித் மற்றும் லைக்கா நிறுவனம் விக்னேஷ் சிவனை துாக்க காரணமாக இருந்துள்ளதாம்.