ரத்தக் காயத்துடன் வெளியான அஜீத்தின் புகைப்படம் - ஷாக்கான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
‘தல’ என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள். நடிகர் அஜீத்தின் 60-வது படமாக உருவான படம்தான் ‘வலிமை’. இப்படத்தை போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அஜீத்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.
கடந்த 24ம் தேதி ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ‘வலிமை’ திரைப்படம் வெளியானது. தற்போது, ‘பாக்ஸ் ஆபிஸி’ல் இப்படம் வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் அஜீத் ரத்தக் காயத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. ரத்த காயத்துடன் இருக்கும் அஜீத்தின் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
‘வலிமை’ படப்பிடிப்பின் போது பைக் ஸ்டண்ட் காட்சி எடுக்கப்பட்டது. அப்போது, அஜீத்திற்கு படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் அஜீத்துக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.
இந்த ரத்த காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த காயத்துடன் இருக்கும் அஜீத்தின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.