வாகா எல்லையில் நடிகர் அஜித் - ராணுவ வீரர்களுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல்

thalaajith actorajith
By Petchi Avudaiappan Oct 19, 2021 05:25 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

வாகா எல்லையில் நடிகர் அஜித் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’.இப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வர உள்ளது. 

வாகா எல்லையில் நடிகர் அஜித் -  ராணுவ வீரர்களுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் | Actor Ajith At Wagah Border

இதனிடையே வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால் அஜித் சமீபத்தில் டெல்லி உள்ளிட வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் வாகா எல்லைக்கு பைக்கில் பயணம் செய்து இருக்கிறார். எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் அஜித் உற்சாகமுடன் உரையாடி அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். மேலும் தேசிய கொடியுடன் வாகா எல்லையில் அஜித் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.