பூஜையுடன் தொடங்கியது அஜித்தின் அடுத்தப்படம் - கதை இதுதான் தெரியுமா?

AjithKumar HVinoth AK61
By Petchi Avudaiappan Apr 11, 2022 04:50 PM GMT
Report

நடிகர் அஜித்தின் 61வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. 

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. தற்காலிகமாக அஜித் 61 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 

இதற்கிடையில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இதில் ஹெச். வினோத், போனி கபூர் உட்பட பலர் கலந்து கொண்டனர். படப்பிடிப்பில் கலந்துகொள்ள அஜித் தற்போது ஹைதராபாத் சென்றுள்ள நிலையில், ஹீரோயினாக நயன்தாரா அல்லது அதிதி ராவ் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. 

இந்த படத்தை வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்.அஜித்தின் இந்த படம் வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.