துணிவு படத்தில் அஜித்திற்கு பதிலாக வேறு நடிகர் நடித்தாரா ?
நடிகர் அஜித்திற்குப் பதிலாக துணிவு படத்தில் வேறு நடிகர் நடித்ததாக தகவல் வெளியான நிலையில், இதற்கு படத்தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
துணிவு
நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் துணிவு ,ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் துணிவு படத்தின் ஷூட்டிங் முடிந்து, திரைப்பட வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது.
#Thunivu HD stills without watermark ? pic.twitter.com/sdmdsiRrW5
— RAJA DK (@rajaduraikannan) December 4, 2022
இந்த நிலையில் துணிவு படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.
வதந்திக்கு முற்று புள்ளி
இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், துணிவு படத்தில் அஜித்குமார் 70% படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும், அவருக்குப் பதில், சுதாகர் என்பவர்தான் நடித்துக் கொடுத்ததாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவியது.
இந்த நிலையில் துணிவு படத்தில் அஜித்குமார்தான் 100% நடித்திருப்பதாக உறுதி செய்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் இந்த செய்தி அஜித் ரசிகர்களிடையே சந்தோஷத்தை கொடுத்துள்ளது.