“அந்த பக்கமே நான் போக மாட்டேன்..ஐஸ்வர்யா தான் அதுல பெஸ்ட்டு” - மனம் திறந்த நடிகர் அபிஷேக் பச்சன்
இந்தி திரையுலகின் சூப்பர்ஸ்டாரான நடிகர் அமிதாப் பச்சனின் மகனும் பாலிவுட்டின் நட்சத்திர நடிகருமான அபிஷேக் பச்சன் தற்போது தாஸ்வி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் கடந்த ஏப்ரல் 7-ந் தேதி ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது.
நடிகர் அபிஷேக் நடிகை ஐஸ்வர்யா ராய்-யை கடந்த 2007-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 10 வயதில் ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் நடிகர் அபிஷேக் பச்சன் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடியபோது மகளின் படிப்பிற்கு உதவுகிறீர்களா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் அபிஷேக் பச்சன், “மகள் ஆராத்யாவின் படிப்பை ஐஸ்வர்யா பார்த்துக்கொள்வார். ஆராத்யாவுக்கு உலகின் மிகச் சிறந்த ஆசிரியை ஐஸ்வர்யா தான்.

அவர் கணிதத்தில் சிறந்தவர் ஆகையால் நான் அந்த பக்கம் போக மாட்டேன் அவரே அனைத்தையும் கவனித்துக்கொள்வார்.” என பதிலளித்துள்ளார்.
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil