எனக்குதான் பிறந்தானா என சந்தேகம் - மகனுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த தமிழ் நடிகர்
அப்பாஸ் தனது மகனுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்துள்ளார்.
நடிகர் அப்பாஸ்
1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அப்பாஸ், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
படையப்பா, மின்னலே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் என பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள அப்பாஸ் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருந்தார். தற்போது அதிதீபாலன், துஷாரா விஜயன் ஆகியோருடன் இணைந்து எக்ஸாம் என்கிற வெப் தொடரில் நடிக்க உள்ளார்.
மகனுக்கு டிஎன்ஏ டெஸ்ட்
கடந்த ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில், நியூசிலாந்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்ததாக கூறியிருந்தார். இவர் தனது மகன் குறித்து அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பேட்டியில் பேசிய அவர், "நான் சின்ன வயதில் செய்த சேட்டைகளுக்கு அளவே இல்லை. எப்போதும் கலகலப்பாக இருப்பேன். நான் ரொம்ப ஜாலி டைப். ஆனால் என் மகன் அப்படி இல்லை. ரொம்பவே அமைதியாக இருப்பான்.
இதனால் இவன் எனக்குதான் பிறந்தானா என்ற சந்தேகம் வந்தது. அதன் பிறகு டிஎன்ஏ பரிசோதனை செய்து பார்த்ததில் அவன் எனக்கு பிறந்தவன்தான் என உறுதியானது" என பேசியுள்ளார். அப்பாஸ் இதை ஜாலியாக பேசி இருந்தாலும் ரசிகர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.