அஜித் படம்: அவர் அத பண்ணுவாருன்னு நினைக்கல; ரொம்ப அசிங்கமாயிருச்சு - நடிகர் அப்பாஸ்!
மம்முட்டியுடன் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் அப்பாஸ் பேசியுள்ளார்.
நடிகர் அப்பாஸ்
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் 1996ம் ஆண்டு வெளியான 'காதல் தேசம்' என்ற படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பூச்சூடவா, பூவேலி, ஆனந்தம், மலபார் போலீஸ், படையப்பா, பம்மல் கே சம்பந்தம், மின்னலே உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
மேலும், தமிழ்,மலையாளம், கன்னடா, தெலுங்கு, இந்தி என இதுவரை 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறையவே திரை உலகை விட்டு காணாமல் போன அப்பாஸ் இப்போது நியூசிலாந்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அப்பாஸ், 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் நடிகர் மம்முட்டியுடன் நடித்த அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.
கஷ்டப்பட்டு நடித்தேன்
இந்த படத்தில் நடிகர் அஜித், மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். அவர் பேசியதாவது "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் ஒரு காட்சியில் மம்முட்டியுடன் நடிக்க வேண்டி இருந்தது.
அவர் சீனியர் நடிகர் என்பதால் முதலிலேயே பயம் வந்துவிட்டது. அந்த பயத்தோடு நான் சரியாக நடிக்கவில்லை. இதைப்பார்த்த மம்முட்டி என்னைப் பார்த்து அலட்சியமா ஒரு லுக் விட்டார். அது எனக்கு ரொம்பவே அசிங்கமாகிவிட்டது.
அதன்பிறகு ரொம்பவே கஷ்டப்பட்டு அந்த சீனில் நடித்தேன். ஆனால், ஆனந்தம் படத்தில் நடித்த போது மம்முட்டியுடன் நெருங்கி பழகிவிட்டேன். நான், மம்முட்டி, முரளி அண்ணா மூவரும் படப்பிடிப்பு முடிந்ததும் ஒன்றாக விளையாட சென்றுவிடுவோம்" என அப்பாஸ் கூறியுள்ளார்.