நடிகை சிம்ரனுடன் தொடர்பில் இருக்கிறேன் - நடிகர் அப்பாஸ் ஓபன் டாக்..!
1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ்.
அப்பாஸ் - சிம்ரன் நடிப்பு
இதை தொடர்ந்து பூச்சூடவா, விஐபி, மின்னலே, இனி எல்லாம் சுகமே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் அப்பாஸ் நடிகை சிம்ரனுடன் இணைந்து விஐபி, பூச்சூடவா போன்ற படங்களில் நடித்திருந்தார்.
பூச்சூடவா படத்தில் அப்பாஸ், சிம்ரன் கெமிஸ்ட்ரி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அப்பொழுது இருவரும் காதலிப்பதாகவும் கூறப்பட்டது.
பின்னர் நடிகை சிம்ரன் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து டாப் ஹீரோயினாக முன்னேறினார். நடிகர் அப்பாஸ்க்கு பட வாய்ப்புகள் குறைந்தது.
சிம்ரனுடன் தொடர்பு
இந்நிலையில் நடிகர் அப்பாஸ் பேட்டி ஒன்றில் சிம்ரன் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அந்த பேட்டியில், சிம்ரன் எனக்கு நல்ல நண்பர், ஸ்கிரீனில் இருவரும் நல்ல ஜோடியாக தெரிந்தோம்.
ரசிகர்களுக்கு எங்களை பிடித்திருந்தது. ஆனால் நாங்கள் இருவரும் இணைந்து அதிகளவில் படங்கள் நடிக்கவில்லை.
தெலுங்கில் ஒரு படமும் நடித்துள்ளேன். தற்போது கூட நான் அவருடன் பேசி வருகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.