எளிமையாக நடந்து முடிந்த ஆதி-நிக்கி திருமணம் : இணையத்தை கலக்கும் பிரபலங்களின் நடன வீடியோ!
டார்லிங் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணி தொடர்ந்து யாகாவராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, பக்க, தேவ், கீ, ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
இதேபோல் மிருகம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் ஆதி தொடர்ந்து ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவாண், வல்லினம், கோச்சடையான், மரகத நாணயம், யூ டர்ன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து யாகாவராயினும் நாகாக்க, மரகதநாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர்.
இந்த ஜோடி ரீல் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ரியல் லைஃப்பிலும் ஜோடியாகியுள்ளனர்.ஒன்றாக படங்களில் நடித்தபோது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.
இதன் தொடர்ச்சியாக ஆதி - நிக்கி கல்ராணி இடையேயான நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 24-ம் தேதி சென்னையில் ஒரு ஒரு ஹோட்டலில் நடைபெற்றது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இவர்களது திருமணம் மே-18 ஆன நேற்று சென்னையில் எளிமையாக நடைப்பெற்றது. திரைத்துறையை சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் , மற்றும் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்து முடிந்த திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளது.
இவர்களின் திருமணத்தில் விக்னேஷ் சிவன், தெலுங்கு நடிகர்கள் நானி , சுதீப் கிஷன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
Our #AK's #AalumaDoluma Song Has Played In Actor @AadhiOfficial And @nikkigalrani Wedding Function?. The Craze Never Ends?#AK61 || #AjithKumar || #AK62 @rameshlaus @Karthikravivarm pic.twitter.com/2gMot5Ujjh
— Hari dgl (@fan_dgl) May 18, 2022
மேலும், ஆதி- நிக்கி ஜோடியின் திருமணத்திற்கு முன்பு நடந்த மஞ்சள் நலங்கு சடங்கின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
அதில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் இருந்து ஆலுமா..டோலுமா பாடல் இசைக்கப்பட்டு, அந்த பாடலுக்கு அனைவரும் நடமாடுவது போண்ட காட்சிகள் இணையத்தை வட்டமடித்து வருகின்றன.