‘கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்கு கண்ணாலம்’ : ஆதி - நிக்கி திருமண தேதி வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி

Aadhi Nikki Galrani
By Swetha Subash May 07, 2022 07:49 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சினிமா
Report

டார்லிங் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணி தொடர்ந்து யாகாவராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, பக்க, தேவ், கீ, ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

இதேபோல் மிருகம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் ஆதி தொடர்ந்து ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவாண், வல்லினம், கோச்சடையான், மரகத நாணயம், யூ டர்ன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து யாகாவராயினும் நாகாக்க, மரகதநாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த ஜோடி ரீல் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ரியல் லைஃப்பிலும் ஜோடியாகியுள்ளனர்.

ஒன்றாக படங்களில் நடித்தபோது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இதன் தொடர்ச்சியாக ஆதி - நிக்கி கல்ராணி இடையேயான நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 24-ம் தேதி சென்னையில் ஒரு ஒரு ஹோட்டலில் நடைபெற்றது.

இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களது திருமணத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது அதுகுறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி ஆதி - நிக்கி திருமணம் வரும் மே 18-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணத்தில் தமிழ் தெலுங்கு திரையுலகினர் கலந்து கொள்வார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை இந்த ரியல் லைஃப் ஜோடிக்கு தெரிவித்து வருகின்றனர்.