காலையிலேயே நிக்கி அப்படிதான்.. அந்த விஷயத்துக்கு தான் சண்டையே - நடிகர் ஆதி பளீச்!

Aadhi Nikki Galrani Tamil Cinema Tamil Actors Tamil Actress
By Jiyath Feb 27, 2024 05:00 PM GMT
Report

திருமணத்திற்கு பிறகு வந்த சிறிய சிறிய சண்டைகள் குறித்து நடிகர் ஆதி பேசியுள்ளார்.

ஆதி-நிக்கி

நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவரும் இனைந்து படங்களில் நடிக்கும்போது காதல் ஏற்பட்டு, திருமணம் வரை சென்றது.

காலையிலேயே நிக்கி அப்படிதான்.. அந்த விஷயத்துக்கு தான் சண்டையே - நடிகர் ஆதி பளீச்! | Actor Aadhi And Actress Nikki Galrani Interview

இந்நிலையில் ஆதி- நிக்கி கல்ராணி இருவரும் ஒன்றாக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது திருமணத்திற்கு பிறகு வந்த சிறிய சிறிய சண்டைகள் குறித்து ஆதி பேசியுள்ளார்.

அழகான சண்டை

அவர் கூறியதாவது "நிக்கி காலையில் பிரஷ் செய்துவிட்டு, பேஸ்ட் ஒரு பக்கம், பிரஷ் ஒரு பக்கம் வைத்து விட்டு வருவார். அதேபோல் காப்பி குடிக்கும்போது, அந்த காப்பி எங்கே முடிகிறதோ அங்கே கப்பை வைத்து விடுவார்.

காலையிலேயே நிக்கி அப்படிதான்.. அந்த விஷயத்துக்கு தான் சண்டையே - நடிகர் ஆதி பளீச்! | Actor Aadhi And Actress Nikki Galrani Interview

பொருட்கள் எல்லாம் ஆங்காங்கே வைத்து விடுவார். அப்போது நான் "ஏம்மா உன்னுடைய பொருட்களை எடுத்து வைப்பதற்காக ஒரு ஆளை வேலைக்கு வைக்க முடியாது" என்று கூறினேன். அந்த மாதிரி விஷயத்தில் சிறிய சிறிய சண்டைகள் வரும். ஆனால் அது அழகான சண்டைகள் தான்" என்று பேசியுள்ளார்.