போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை - முதலமைச்சர் எச்சரிக்கை..!

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Aug 11, 2023 06:52 AM GMT
Report

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் முன்னிலையில் கஞ்சா அழிப்பு 

சென்னை, கலைவாணர் அரங்கில் காவல்துறை சார்பில் ‘போதை பொருட்கள் இல்லா தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Action under Gangster Act for sale of narcotics

அப்போது பேசிய அவர், போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சி. காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 16,000 கிலோ கஞ்சா முதலமைச்சர் முன்னிலையில் அழிக்கப்பட்டது.

செங்கல்பட்டு, சேலம், தஞ்சை, நெல்லை மண்டபங்களில் 16,000 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. போதைப்பொருட்கள் பயன்பாடு மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும். போதைப்பொருட்கள் பயன்படுத்துவோர் சமூகத்திற்கு சுமையாக மாறியுள்ளனர்.

குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

மாணவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் எதிர்காலத்தை இழக்கின்றனர். போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

கஞ்சா இல்லாத தமிழகம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. பள்ளி, கல்லூரிக்கு அருகில் போதைப்பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பில் சர்வாதிகாரியாக செயல்படுவதில் உறுதியாக இருக்கிறேன். போதைப்பொருள் பயன்பாடு தனி மனிதர் மட்டுமின்றி அவர் சார்ந்த சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

போதைப்பொருள் பயன்பாடு மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும். இதனிடையே, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மாணவர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு உறுதி பொழி ஏற்றுக்கொண்டனர்.