மக்களை ஈர்க்கும் அதிரடி திட்டங்கள்! திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானது

people election action statement
By Jon Mar 13, 2021 12:21 PM GMT
Report

சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களுக்கு சென்று, தேர்தல் அறிக்கையை வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்திவிட்டு, பின்னர், சென்னை அண்ணா அறிவாயலத்திற்கு சென்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

  அமைச்சர்கள் மீதான ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். பெட்ரோல் விலை ரூ.5, டீசல் விலை ரூ. 4 குறைக்கப்படும். கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.4,000 வழங்கப்படும்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும். ரேசனில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும். இந்து ஆலயங்கள் புனரமைப்பு பணிக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் புனரமைப்பிற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் பத்திரிக்கையாளர், ஊடகத்துறையினர் நலனுக்கு தனி வாரியம் அமைக்கப்படும்

தமிழக ஆறுகள் மாசடையாமல் தடுக்க ஆறுகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும் ஏழை மக்கள் மக்கள் உணவருந்த 1,500 இடங்களில் கலைஞர் உணவகம் ஆட்டோ ஓட்டுநர்கள், சொந்தமாக ஆட்டோ வாங்கிட ரூ.10,000 மானியம் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் 32 லட்சம் கைம்பெண்கள், மாற்று திறனாளிகள் ஓய்வூதியம் ரூ. 1,500ஆக உயர்த்தப்படும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 70 வயதுக்கு மேல் 10%, 80 வயதுக்கு மேல் 10% உயர்த்தி வழங்கப்படும் கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் விவசாயிகள் புதிய மின்மோட்டார் வாங்க ரூ.10,000 மானியம் வழங்கப்படும்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் 200 தடுப்பணைகள் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் பொதுபட்டியலில் உள்ள கல்வி பட்டியலை மாநில பட்டியலில் கொண்டு வர நடவடிக்கை 8ம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க நடவடிக்கை வேளாண்மை துறைக்கு என்று தனி நிதி நிலை அறிக்கை – இயற்கை வேளாண்மைக்கு என்று தனிப்பிரிவு தமிழ் எழுத்து வரி வடிவம் சிதைக்கப்படுவதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்

இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்த நடவடிக்கை உழவர் சந்தைகளுக்கு உயிரூட்டப்பட்டு, அனைத்து நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் பெண்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதமாக உயர்த்தப்படும் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் – தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வற்புறுத்துவோம்

வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் இந்து கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல ஒரு லட்சம் பேருக்கு நிதி தமிழகத்தில் ரயில் பாதை இல்லாத 16 வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்க வலியுறுத்தல் பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும் 100 நாட்கள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்களுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி மகளிர் சுய உதவி குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் என தனி அமைச்சகம் அமைக்கப்படும் முக்கிய மலை கோவில்களில் கேபிள் கார் வசதி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்திருக்கிறார்.