தேர்தல் நாளில் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கவில்லை என்றால் நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
leave
salary
high court
order
By Jon
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் அன்று தமிழகம் முழுவதும் அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஏப்ரல் 6-ம் தேதி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
அது தொடர்பாக உரிய அரசாணை வெளியிடவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.