தொடர் தோல்விகளால் சொத்துகளை இழந்தேன் - நடிகர் அர்ஜூன் சொன்ன தகவலால் அதிர்ச்சி

Actorarjun actionkingarjun
By Petchi Avudaiappan Sep 30, 2021 08:08 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

 சினிமாவில் படங்கள் தோல்வியடைந்ததால், சொத்துக்களை இழந்து பல சவால்களை எதிர்கொண்டதாக நடிகர் அர்ஜூன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அர்ஜூன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த ஷோவின் புரோமோ ஒன்றில் தன்னுடைய ஆரம்பகால சினிமா அனுபவங்களை போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதில் தமிழ் சினிமாவில் தனக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருந்தது. ஆனால், குறிப்பிட்ட சில காலங்களில் திடீரென படங்கள் தோல்வியை சந்தித்ததால் தான் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்ததாகவும், அந்த நேரத்தில் நானே படங்களை டைரக்ட் செய்ததாகவும் கூறுகிறார்.

மேலும் சொந்தமாக படங்களை இயக்கினேன். இதனால், என்னுடைய சொத்துகள் முழுவதையும் இழந்தேன். ஒரு கட்டத்தில் தனக்கு ஒரே ஒரு சொத்து மட்டும் தான் இருந்தது. அதனையும் விற்றுவிட்டேன். ஆனால், படத்தை முடிக்க பணம் தேவை இருந்தது. அப்போது, பெங்களுரில் எங்களுக்கு சொந்தமான ஒரே ஒரு வீடு மட்டும் இருந்தது. என்னோட அம்மா, அதையும் விற்பனை செஞ்சி எனக்கு கொடுத்தாங்க" என தன்னுடைய சோகமான மறுபக்கத்தை அவர் தெரிவித்துள்ளார்.

இதனைப் பார்த்த பலரும் ஆக்‌ஷன் கிங்கிற்கு பின்னால் இப்படி ஒரு சோக சம்பவமா என கருத்து தெரிவித்துள்ளனர்.