உடலில் செரிமான பிரச்சினைக்கு காரணம் என்ன? ஆபத்தும் ஏற்படும் ஜாக்கிரதை

health stomach problem home remedies acidity
By Manchu Apr 14, 2021 09:27 AM GMT
Report

உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது. செரிமானத்தினால் தான் உடல் சக்தி பெறுகிறது.

நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போகும் போது அஜீரணம் உண்டாகும். நாம் உண்ணும் உணவை செரிக்க செரிமான நீர் சுரப்பதில் பிரச்சனை ஏற்பட்டாலும் இந்த வயிற்று கோளறு ஏற்படும்.

பொதுவாகவே வயது ஏற ஏற செரிமான நீர் சுரப்பது குறைந்து கொண்டே வரும். சில சமயங்களில் உண்ணும் உணவை சரியாக வாயில் அரைத்து மென்று சாப்பிடாவிட்டாலும் அஜீரணம் வரும்.

உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையாலும் அதிக உணவு, அடிக்கடி சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் வருகிறது. மலங்கழிக்க வேணடும் என்ற உணர்வு இருந்தாலும் மலங்கழிக்க முடியாது.


இதனால் உடல்கனமாதல், தலைவலி, பசியின்மை, எந்த வேலையிலும் அக்கறையின்மை ஆகியன நேரும். உணவு வெகு நேரம் குடலில் தங்கி இருந்தால் வாயு உருவாகும்.

அழுகிய நிலை உருவாகும். வயிறு வீங்கி வலி வரும். வயிறு, குடல் பகுதியில் உதர வாயு சேர்வதால் அழற்சி உண்டாகும். இது செரிமானக் குறைபாட்டால் நேர்கிறது.

வாய் வழியாகவோ, மலக்குடல் வழியாகவோ வாயுவை வெளியேற்றாவிட்டால் மார்பு பகுதியில் வலியை உண்டாக்கும். இதய நோய் என்று சந்தேகம் வரும். மூச்சு விடுதல் சிரமம் ஆகும்.

அஜீரணத்திற்க்கு வெறும் சீரகத்தை மட்டும் நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த சீரக நீரை குடித்து வர நன்கு ஜீரணம் ஆவதோடு, உடலும் குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணத்தினால் அஜீரணம் ஏற்பட்டிருந்தால் உடனே சரியாகிவிடும்.