பிரச்சாரத்தில் ஆசீட் வீச்சு? - கன்னையாகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார் - அதிர்ச்சி சம்பவம்

Acid range Traumatic event Survived Kannaiya Kumar
By Nandhini 9 மாதங்கள் முன்

தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த கன்னையா குமார் மீது ஆசிட் வீசப்பட்டதால் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக இருந்தவர் கன்னையா குமார். இவர் கல்லூரி காலத்திலிருந்தே பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களை கடுமையாக எதிர்த்து பேசி வருகிறார்.

அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த கன்னையா குமார் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனையடுத்து, உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக லக்னோ சென்றார் கன்னையா குமார்.

இதன் பின்பு, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற போது மர்ம நபர்கள் சிலர் அவர் மீது ஆசிட் வீசினார்கள். இந்த ஆசிட் வீச்சில் அவருடன் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் மீதும் பட்டது.

இந்த ஆசிட் தாக்குதலில் கன்னையா குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். ஆசிட் வீசிய மர்ம நபர்களை தொண்டர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு கன்னையாகுமார் வந்த போது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் கோஷம் போட்டனர். அப்போது, தேவன்ஷ் பாஜ்பாய் என்பவர் அவர் மீது மை வீசினார். அது ஆசிட்டா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆசிட் வீசியதாகவும் அதில் கன்னையாகுமார் உயிர் பிழைத்ததாகவும் காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அது ‘மை’யா? ஆசிட்டா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

பிரச்சாரத்தில் ஆசீட் வீச்சு? - கன்னையாகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார் - அதிர்ச்சி சம்பவம் | Acid Range Kannaiya Kumar Traumatic Event