அச்சரபாக்கம் ஒன்றியம் விளாங்காடு ஊராட்சியில் போலி கிராமசபை கூட்டம் - பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

village acharapakkam panchayat
By Irumporai Dec 24, 2021 08:57 AM GMT
Report

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரபாக்கம் ஒன்றியம் விளாங்காடு ஊராட்சியில் போலி கிராமசபை கூட்டம் நடத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ,விளாங்காடு ஊராட்சியில் கடந்த 15.12.2021 ஆம் தேதி அன்று கிராம சபை கூட்டம் நடந்ததாகவும் .

30க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் எழுதி அதனை ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கும் மற்றும் பொதுமக்கள் யாருக்கும் தெரியாமல்  அறிவிப்பு புத்தகத்தில் பதியாமல் .

 கிராம சபை கூட்டம் நடந்ததாக கூறி 100 நாள் வேலை நடைபெற்ற இடத்தில் ஊராட்சி செயலர் திரு.பார்த்தசாரதி ஆலோசனையின் பெயரில் பொதுமக்களிடம் கைரேகை மற்றும் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

அச்சரபாக்கம் ஒன்றியம் விளாங்காடு ஊராட்சியில் போலி கிராமசபை கூட்டம் - பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு | Acharapakkam Union Fake Village Council Panchayat

பார்த்தசாரதி என்பவர் விளாங்காடு பஞ்சாயத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊராட்சியில் பணியாற்றி பல நிர்வாக சீர்கேடுகளை நடத்தி வருகிறார்.இவர் மீது ஏற்கனவே பல நிர்வாக முறைகேடு புகார் நிலுவையில் உள்ளது.

ஆகவே , இதுபோன்ற போலியான கிராமசபை நடத்தியதாக கூறி பஞ்சாயத்து நிர்வாகத்தை சீர்குலைக்க முயலும் இவரை விளாங்காடு பஞ்சாயத்தில் ஊராட்சி செயலர் பதவியிலிருந்து பணியிடை நீக்கம் அல்லது பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.