பில்கிஸ் பானு பாலியல் வழக்கு; குற்றவாளி பிராமணர்கள்,நல்லவர்கள் என்பதால் விடுதலை - பாஜக MLA
பில்கிஸ் பானு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் விடுதலை செய்யப்பட்ட அனைவர்களும் பிராமணர்கள், நல்லவர்கள் என பாஜக எம்எல்ஏ பேசியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோத்ரா கலவரத்தில் கொடூரம்
குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது 20 வயதான கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானு 11 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.
அவரது 3 வயது மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த நிலையில் சுதந்திர தினம் அன்று இந்த 11 பேரும் குஜராத் மாநில அரசால் விடுதலை செய்யப்பட்டனர். நாட்டையே உலுக்கிய சம்பவத்தில் தொடர்புடையவர்களை அந்த மாநில அரசு விடுதலை செய்தது.
வெளியே வந்த அவர்களை சிறைவாயிலில் ஆரத்தி எடுத்து இனிப்புகள் வழங்கி வரவேற்ற வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தான் விடுதலைக்கு காரணம் - பிஜேபி எம்எல்ஏ
குற்றவாளிகளை விடுதலை செய்ய பரிந்துரைத்த குழுவில் இருந்த பாஜக எம்எல்ஏ சிகே ரவுல்ஜி, விடுவிக்கப்பட்ட 11 பேரும் பிராமணர்கள், பொதுவாகவே பிராமணர்கள் நல்ல பழக்கம் உடையவர்கள் என்றும், தவறான நோக்கத்தின் அடிப்படையிலேயே அவர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்வோரை ஆதரிப்பது என்பது பாஜகவின் அற்ப மனநிலையை காட்டுகிறது.
இது போன்று அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா? என்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக எம்எல்ஏ-வின் விளக்கம் அக்கட்சியின் தரம் தாழ்ந்த செயலை காட்டுவதாகவும், பாலியல் வழக்கு குற்றவாளிகளை பாஜக ஆதரிப்பது ஒன்றும் புதியது அல்ல என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு ஒரு பெண்ணா இல்லை முஸ்லீம்-ஆ என்பதை தேசமே முடிவு செய்யட்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
“They are Brahmins, Men of Good Sanskaar. Their conduct in jail was good": BJP MLA #CKRaulji
— YSR (@ysathishreddy) August 18, 2022
BJP now terms rapists as ‘Men of Good Sanskar’. This is the lowest a party can ever stoop! ? @KTRTRS @pbhushan1 pic.twitter.com/iuOZ9JTbhh