விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு: சிபிசிஐடி போலீஸ் காவலில் உள்ள இருவருக்கு மருத்துவ பரிசோதனை

sexualassault virudhunagarcrime accusedinhospital cbcidenquiry
By Swetha Subash Apr 01, 2022 02:23 PM GMT
Report

விருதுநகர் இளம் பெண் பாலியல் வழக்கில் சிபிசிஐடி போலீஸ் காவலில் உள்ள ஜூனத் அகமது மற்றும் மாடசாமிக்கு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

22 வயது இளம் பெண் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரில் ஹரிகரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய நான்கு பேரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து இன்று 4 வது நாளாக விசாரணை செய்து வருகின்றனர்.

இவர்களை தினமும் காலை மற்றும் மாலை விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சிபிசிஐடி அலுவலகம் வந்து பரிசோதனை செய்துவிட்டு செல்வார்கள்.

விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு: சிபிசிஐடி போலீஸ் காவலில் உள்ள இருவருக்கு மருத்துவ பரிசோதனை | Accused Of Virudhunagar Sexual Case In Hospital

இன்று வழக்கம் போல் பரிசோதனை செய்ததில் ஜூனத் அகமது, மற்றும் மாடசாமி ஆகியோருக்கு உடல்நிலை சரியில்லாததால் இருவரை விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று

மேல் சிகிச்சை செய்ததில் 4 நாட்கள் தொடர்ச்சியாக இவர்களிடம் விசாரணை செய்து வருவதால் ஜுனத் அகமதுவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் ஜூனத் அகமதுவிற்கு எக்கோ பரிசோதனையும், மாடசாமிக்கு ரத்தப் பரிசோதனையும் நடத்தப்பட்டது என விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை தகவல்.