கோவையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு ; குற்றவாளிக்கு குண்டாஸ்
கோவையில் சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கை கால்கள் கட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலை செய்த நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோவை சரவணம்பட்டி பகுதி யமுனா நகரில் கடந்த மாதம் கை,கால்கள் கட்டப்பட்டு பாதி எரிக்கப்பட்ட நிலையில் 15 வயது சிறுமியின் உடலானது கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் குடும்ப நண்பரான முத்துக்குமார் என்வவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில், முத்துக்குமார் மீது சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு (போக்சோ) பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து, முத்துக்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள அவரிடம் போலீசார் இன்று வழங்கியுள்ளனர்