நடிகர் விஜய் ஓட்டி வந்த சைக்கிள் நிறுவனத்திற்கு குவியும் ஆர்டர்கள்!

vijay master bicycle montra
By Jon Apr 07, 2021 04:49 PM GMT
Report

தங்களுக்கு பிடித்த நடிகர்கள் அணியும் டிரெஸ் முதல் ஷூ வரைக்கும் பாலோவ் செய்து தாங்களும் அது போலவே அணிவதில் அலாதியான விருப்பம் கொண்டவர்கள் ரசிகர்கள். நேற்று தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலுக்கு நடிகர் விஜய் ஓட்டுப்போட சைக்கிளில் வந்தார். அந்த சைக்கிளை நிறுவனத்தின் பெயரை தற்போது ரசிகர்கள் கூகுளில் அதிகம் தேடி வருகின்றனர்.

விஜய் ஓட்டுப்போடுவதற்கு சைக்கிளில் வந்தது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டுவிட்டரிலும் இந்தியா டிரெண்டிங்கானது. வாக்குச்சாவடி தன் வீட்டுக்கு அருகே இருந்ததால், எளிமையாக சென்று வாக்களித்து வரலாம் என்று சைக்கிளில் வந்தார் நடிகர் விஜய்.

ஆனால், அவர் பெட்ரோல் -டீசல் விலையேற்றத்தினால் மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க இப்படி சைக்கிளில் வந்தார் என்று வதந்தியை பரப்பி விட, கறுப்பு -சிகப்பு கலரில் இருந்த அவரது சைக்கிள் கலரை வைத்து அவர் மறைமுகமாக திமுகவுக்கு ஓட்டு போட சொல்கிறார்கள் என்ற பேச்சும் சர்ச்சையை கிளப்பியது.

நடிகர் விஜய் ஓட்டி வந்த சைக்கிள் நிறுவனத்திற்கு குவியும் ஆர்டர்கள்! | Accumulating Orders Bicycle Company Vijay

இதனையடுத்து, விஜய் ஓட்டி வந்த சைக்கிள் பற்றி தேடிய ரசிகர்கள். அந்த சைக்கிள், மான்ட்ரா (montra)நிறுவனத்தின் தயாரிப்பான கியர் அம்சன் கொண்டது. அந்த சைக்கிளின் விலை இந்திய மதிப்பில் ரூ.22 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும்.

தற்போது பலர் அந்த சைக்கிளை வாங்க முண்டியடித்துக் கொண்டு புக் செய்து வருகிறார்கள்.