கோர விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – சுயநினைவை இழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி: பதைபதைக்கும் காட்சி
சாலை விபத்தில் சிக்கி சுய நினைவை இழந்த தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனேவே சென்ற ஆண்டில் இருந்தே திரையுலகம் கொரோனா, இயற்கை மரணம் என பல முன்னணி நட்சத்திரங்களை இழந்துள்ளது.
தற்போது ரசிகர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி செய்தியாக, தெலுங்கு மெகா ஸ்டார் நடிகர் சாய் தரம் தேஜ், தெலுங்கானா மாநிலத்தில் மாதாப்பூர் என்கிற இடத்தில் பைக்கில் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானார்.
இதில் படுகாயமடைந்த அவர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் திவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்தால் அவர் சுய நினைவை இழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#SaiDharamTej Accident CCTV Visuals pic.twitter.com/5R01xwlzB7
— MIRCHI9 (@Mirchi9) September 10, 2021