முறிந்த விலா எலும்பு : மருத்துவமனையில் அமிதாப் பச்சன் பதட்டத்தில் திரையுலகம்

Amitabh Bachchan
By Irumporai Mar 06, 2023 06:35 AM GMT
Report

படபிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயத்தல் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமிதாப் பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தற்போது பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட்கே படத்தில் நடித்து வருகின்றார் . இந்த நிலையில் படத்தின் ஒரு ஆக்‌ஷன் காட்சியின் போது அமிதாப்பச்சனுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டது.

எலும்பு முறிவு

காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அமிதாப்பச்சன் ஹைத்ராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சைக்கு  பின்பு மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனி விமானம் மூல்ம வீடு திரும்பினார், காயம் குணமாக சில வாரங்கள் ஆகும் என்பதால் அவருக்காக உள்ள படக்காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காயம் காரணமாக அமிதாப் பச்சனுக்கு இன்னும் சில நாட்களுக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்