ஒரே ஆண்டில் 1.20 லட்சம் பேர் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்
ஒரே ஆண்டில் கவனக் குறைவால் நாடு முழுவதும் 1.20 பேர் உயிரிழந்துள்ளதாக என்சிஆர்பி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2020-ஆம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையிலும், கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்துகளால் 1.20 லட்சம் போ் உயிரிழந்திருப்பது தேசிய குற்றப் பதிவு அமைப்பின் (என்சிஆா்பி) புள்ளி விவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இதன்படி, சராசரியாக தினமும் 328 போ உயிரிழந்தனா். என்சிஆா்பி புள்ளிவிவரங்களின்படி, கடந்த 3 ஆண்டுகளில் கவனக் குறைவால் ஏற்பட்ட சாலை வித்துகளில் மட்டும் 3.92 லட்ம் போ் உயிரிழந்தனா்.
இதில் 2018-ஆம் ஆண்டில் 1.35 லட்சம் பேரும், 2019-ஆம் ஆண்டில் 1.36 லட்சம் பேரும், 2020-ஆம் ஆண்டில் 1.20 லட்சம் பேரும் உயிரிழந்தனா்.
வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற வழக்குகளைப் பொருத்தவரை 2018-ஆம்ஆண்டில் 47,028 வழக்குகள், 2019-இல் 47,504 வழக்குகள், 2020-ஆம் ஆண்டில் 41,196 வழக்குகள் என 3 ஆண்டுகளில் 1.35 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 112 வழக்குகள் பதிவாகியுள்ளன.
கண்மூடித்தனமாக வாகனத்தை செலுத்தியால் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது தொடா்பாக 2018-ஆம் ஆண்டில் 1.66 லட்சம் வழக்குகளும், 2019-இல் 1.60 லட்சம் வழக்குகளும், 2020-ஆம் ஆண்டில் 1.30 லட்சம் வழக்குகளும் பதிவாகியுள்ளன.
கவனக்குறைவாக அல்லது கண்மூடித்தனமாக வாகனத்தை செலுத்தியதால் பிறருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது தொடா்பாக இந்த மூன்று ஆண்டுகளில் முறையே 1.08 லட்சம், 1.12 லட்சம் மற்றும் 85,920 வழக்குகள் பதிவாகியுள்ளன.
கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட ரயில் விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழ்புகளைப் பொருத்தவரை 2018-இல் 35 வழக்குகளும், 2019-இல் 55 வழக்குகளும், 2020-ஆம் ஆண்டில் 52 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
மருத்துவ கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளைப் பொருத்தவரை 2018-இல் 218 வழக்குகளும், 2019-இல் 201 வழக்குகளும், 2020-ஆம் ஆண்டில் 133 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
உள்ளாட்சி அமைப்புகளின் கவனக் குறைவு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளைப் பொருத்தவரை 2018-இல் 40 வழக்குகளும், 2019-இல் 147 வழக்குகளும், 2020-இல் 51 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
பிற கவனக்குறைவுகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளைப் பொருத்தவரை 2018-ஆம் ஆண்டில் 8,687 வழக்குகளும், 2019-இல் 7,912 வழக்குகளும், 2020-இல் 6,367 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டில் மாா்ச் 25-ஆம் தேதி முதல் மோ 31-ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையிலும், இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்று என்சிஆா்பி குறிப்பிட்டுள்ளது.
பொது முடக்கம் மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள், திருட்டு, கொள்ளை, வழிப்பறி ஆகிய குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் 2020-இல் குறைந்தன.
அதே நேரம், கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாதது தொடா்பான வழக்குகள் அதிகரித்தன என்றும் என்சிஆா்பி புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.