மகன் கண் முன்னே விபத்தில் தலை நழுங்கி துடிதுடித்து இறந்த தாய் - நெஞ்சை ரணமாக்கிய சோகச் சம்பவம்

accident mother death
3 மாதங்கள் முன்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி திம்மாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவா (40). இவரது மனைவி சரஸ்வதி (34). இந்த தம்பதிகளுக்கு திருப்பதி (23) என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில், சரஸ்வதிக்கு சில தினங்களுக்கு முன்பு 2-வதாக குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்காக வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சரஸ்வதி, கைக்குழந்தையுடன் தன் கணவர் சிவா, மற்றும் சகோதரி சுமித்ரா (40) மற்றும் மகன் திருப்பதி (23) ஆகிய 4 பேரும் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார்கள்.

அப்போது, திருப்பத்தூர் அருகே துரை நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அரசு பேருந்தில் பைக்கில் மோதியது. இதில், நிலைதடுமாறி 4 பேரும் கீழே விழுந்தனர்.

அப்போது, பேருந்தின் சக்கரம் சுமித்ராவின் தலைமீது ஏறி இறங்கியது. இதில், சுமித்ரா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

மற்ற மூவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பத்தூர் நகர காவல்துறை சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வாணியம்பாடி முதல் ஊத்தங்கரை வரை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கான தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருப்பத்தூர் வாணியம்பாடி முக்கிய சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், தினம் ஒரு சாலை விபத்துகள் நடப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.