திடீரென தலையில் பட்ட கேபிள் ஒயர் - அடுத்து ஒரு நொடியில் நடந்த விபரீதம்... - அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Accident
By Nandhini 1 மாதம் முன்

திடீரென தலையில் பட்ட கேபிள் ஒயரால், மின்சாரம் தாக்கி தண்டவாளத்தில் தூக்கி அடிக்கப்பட்ட நபரின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் தாக்கி தண்டவாளத்தில் தூக்கி அடிக்கப்பட்ட நபர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், காரக்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் மேடை அருகே இருவர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு நீண்ட கேபிள் ஒயர் பேசிக்கொண்டிருந்த ஒருவர் தலையில் பட்டது. இதனையடுத்து கேபிள் ஒயரிலிருந்து மின்சாரம் அந்த நபர் மீது பாய்ந்தது.

மின்சாரம் பாய்ந்ததில் அந்த நபர் பலத்த தீக்காயங்களுடன் தண்டவாளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

தற்போது இத குறித்த சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

accident-loose-cable-kharagpur-station