Wednesday, May 21, 2025

ஜம்மு - காஷ்மீர் அருகே ராணுவத்தினர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து பயங்கர விபத்து - 6 வீரர்கள் பலி

Jammu And Kashmir Accident Death
By Nandhini 3 years ago
Report

ஜம்மு - காஷ்மீர் அருகே  ராணுவத்தினர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 6 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றில் குப்புற கவிழ்ந்த பேருந்து

ஜம்மு-காஷ்மீர், பஹல்காம் நோக்கி இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் 39 பேர் ஒரு சிவில் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது பஹல்காம் என்ற இடத்தில் பேருந்து சென்றுக்கொண்டிருந்த போது திடீரென பிரேக் பிடிக்காமல் பேருந்து ஆற்றில் குப்புற கவிழ்ந்தது. ஆற்றில் விழுந்த பேருந்து அப்பளம் போல் ஆற்றில் அடித்து நொறுங்கியது.

accident

6 வீரர்கள் பரிதாப பலி

இந்த பயங்கர விபத்தில் பயணம் செய்த 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்புத்துறையினர் துரிதமாக மீட்கும் பணியில் இறங்கினர்.

இந்த விபத்தில் பலர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ராணுவத்தினர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 6 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.