கிருஷ்ணகிரி - லாரி மீது பஸ் மோதி பங்கர விபத்து!
ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது கார்மெண்ட்ஸ் பேருந்து மோதி விபத்து.
பேருந்தில் பயணித்த 15பேர் படுகாயம் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் FIRST STEP BABY WEAR என்னும் தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வேலை பார்க்க வரும் தொழிலாளர்களுக்கு நிறுவனத்தின் சார்பிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இன்று காலை ஒசூரிலிருந்து 17 பயணிகளுடன் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி நோக்கி சென்ற கார்மெண்ட்ஸ் பேருந்து, கோபசந்திரம் என்னுமிடத்தில் முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில்
பேருந்தில் பயணித்த 5 ஆண்கள் 10பெண்கள் என 15பேர் காயங்களுடன் சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிப்பர் லாரி திடீரென சாலையில் நின்றதாலே விபத்து ஏற்ப்பட்டதாக கூறப்படும் நிலையில் சூளகரி போலிசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றன.