தாயின் கண்முன் நடந்த கொடூரம்....தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்த 10 வயது சிறுமி
சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலம்பாக்கத்தில் விபரீதம்
சென்னை கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தி.இவர் தன்னுடைய 10 வயது மகளான லியோரா ஸ்ரீயை இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் பள்ளி அழைத்து சென்றுள்ளார். 10 வயதான லியோரா ஸ்ரீ அதே பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார்.
மெட்ரோ ரயில் பணிகளுக்காக சாலை சரியாக இல்லாத நிலையில், வாகனத்தை மிகவும் கவனமாகவே கீர்த்தி இயக்கியுள்ளார். போக்குவரத்து நெரிசலும் கடுமையாக இருந்து காரணத்தால், வாகனத்தை இயக்கி நிலையில், திடீரென எதிர்பட்டாத விதமாக சாலையில் தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
தப்பியோடிய லாரி டிரைவர்
அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரியின் சக்கரம் சிறுமி லியோரா ஸ்ரீ மீது ஏறியது. இதில் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்தை ஏற்படுத்திய டிரைவர் சாலையிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த கோவிலம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தப்பியோடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.