கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்த பக்தர் உயிரிழப்பு - பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!
கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்த பக்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்த பக்தர்
மதுரை பழங்காநத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கிய பொருட்களை வைத்து அம்மனுக்கு கூழ் காய்ச்சும் பணியை பக்தர்கள் செய்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, முத்துக்குமார் என்கிற முருகனுக்கு திடீரென வலிப்பு வந்தது. அப்போது, நிலைதடுமாறி கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்தார்.
இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து முத்துகுமாரை மீட்க முயற்சி செய்தனர்.
முத்துக்குமார் கூழ் அண்டாவில் விழுந்து வலியால் அலறி துடித்தார். கொதிக்கும் கூழ் என்பதால் அங்கிருந்தவர்களால் முத்துக்குமாரை மீட்க சிரமம் ஏற்பட்டது. அண்டாவை தள்ளிவிட்டு ஒரு வழியாக முத்துக்குமாரை மீட்டனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். 65 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் இருந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அங்கிருந்த சிசிடிவி கேமராவில் இது குறித்த காட்சி பதிவாகியிருந்தது. தற்போது, இந்த சிசிடிவி காட்சி வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.