நெல்லை அருகே கல்குவாரியில் விபத்து - இடிபாடுகளில் சிக்கிய 6 பேர்..!
நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் ரட்சத கல் விழுந்த விபத்தில் இடிபாடுகளில் 6 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள தனியார் கல்குவாரியில் ராட்சத கல் விழுந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் அங்கு பணியாற்றிய 6 தொழிலாளர்கள் இந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணியில் மற்ற தொழிலாளர்கள் ஈடுபட்ட நிலையில்,இது குறித்து தகவல் தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பாளையங்கோட்டை மற்றும் நாங்குநேரி பகுதிகளில் இருந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களின் நிலை குறித்த தகவல்கள் தெளிவாக தெரியவில்லை.
இந்த விபத்து குறித்த தகவலறிந்து, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகிறார்.