ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து - 4 பெண்கள் உள்பட 5 பேர் பலி
ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டின் தன்பாத் நகரில் ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இவற்றில் பல சுரங்கங்கள், நிலக்கரி எடுக்கும் பணிகள் முடிந்து தேவையற்றவையாக உள்ளது.இவற்றில் இரு சுரங்கங்கள் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தன.
அடுத்ததாக, கோபிநாத்பூரில் மற்றொரு சுரங்கம் நேற்று இடிந்து விழுந்தது. அப்போது சுரங்கத்திற்குள் சட்டவிரோதமாக நிலக்கரி சேகரிக்கும் பணியில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
ஈஸ்டர்ன் நிலக்கரி சுரங்கம் லிமிடெட் என்ற பெயரிலான அந்த நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகி உள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.